ரோகித் சர்மாவுக்கு கொரோனா!! கோப்பையை வெல்லுமா இந்தியா?! கலக்கத்தில் ரசிகர்கள்!!

 
ரோஹித் சர்மா

ரோகித் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 ஆட்டங்களில் விளையாட இருக்கிறது. இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு நேற்று நடத்தப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரோஹித்சர்மா

ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறித்து, பிசிசிஐ கூறும்போது, ‘‘இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே ரோகித் சர்மா தற்போது ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பில் உள்ளார்’’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


முன்னாள் கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 2-1 புள்ளிகள் பெற்று முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக கொரோனா தொற்று காரணமாக 5வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் இதனால், பிசிசிஐ மற்றும் இசிபி ஆகியவை இந்த ஆண்டு மீதமுள்ள டெஸ்ட் போட்டியை நடத்தி முடிப்பது என முடிவு செய்தன.

கொரோனா

அதைத்தொடர்ந்து பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் ஜூலை 1ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. இதற்கு முன்னதாக, இங்கிலாந்தில் இந்திய அணி மேற்கொண்டுள்ள 4 நாள் சுற்றுப்பயணத்தில் லெய்செஸ்டர்ஷைர் அணியுடன் விளையாடும் அணியில் ரோகித் சர்மா இடம் பெற்றிருந்தார். இதன் மூலம் அவரின் ஆட்டத்திறன் வெளிப்பட இருந்த நிலையில், துரதிருஷ்டவசமாக தற்போது அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு இன்னும் கால அவகாசம் இருப்பதால், அதற்குள் ரோகித் சர்மா குணமடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அது இந்திய அணியின் கேப்டனாக ரோகித்தின் முதல் டெஸ்ட் போட்டியாக இருக்கும். ரோகித் சர்மா இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் சமீபத்தில் தனது 15 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்தார். இது குறித்து சக வீரர்கள் மற்றும் அவரது கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web