பள்ளி மாணவன் உயிரை பறித்த கிரிக்கெட் பந்து!! ராமநாதபுரத்தில் சோகம்!!

 
ராமநாதபுரம்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக வீட்டுக்குள் அடைபட்டிருந்த குழந்தைகள் தெருவில் இறங்கி விளையாடத் தொடங்கியுள்ளனர். அதிலும்  தெருவோர கிரிக்கெட் தான் பெரும்பாலானவர்களின் ஒரே சாய்சாக இருந்து வருகிறது.பிள்ளைகளை வெளியில் விளையாட அனுமதிக்கும் நேரத்தில் அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்பதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். 

ராமநாதபுரம்  மாவட்டத்தில்  நயினார்கோயில் வன்னிவயல் கிராமத்தில் வசித்து வருபவர் பழனிக்குமார். இவருடைய 11 வயது மகன் சுபாஷ் குமார்,  வீட்டிற்கு அருகே நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அவருக்கு கிரிக்கெட் விளையாடுவது என்றால் ரொம்ப இஷ்டம்.

சிறுவன் பலி

அதிலும் நண்பர்களை கண்டு விட்டால் நேரம் காலம் போவது தெரியாமல் கிரிக்கெட்டிலேயே மூழ்கி கிடப்பார்.  சுபாஷ் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். சுபாசுக்கு ஏற்கெனவே மூச்சுத்திணறல் பிரச்னை இருந்து வந்தது. பள்ளி விடுமுறை தினமானதால் நேற்று வழக்கம் போல்  வீட்டின் அருகே நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சுபாஷ் குமாரின் நெஞ்சில் பந்து பட்டுவிட்டது. 

ramanathapuram
இதனால் மயங்கி விழுந்ததும் நண்பர்கள் அலறி அடித்துக் கொண்டு பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்கள் சுபாசை  உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.ஆனால்  அங்கு சுபாஷ் குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web