தொடரும் நெருக்கடிகள்!! ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு!!

 
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் மூட உத்தரவு!

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது ஸ்டெர்லைட் ஆலை. இந்த ஆலைக்கு எதிராக 2018-ம் ஆண்டு தொடர் போராட்டங்களும், கலெக்டர் அலுவலகம்  முற்றுகை போராட்டமும் நடத்தப்பட்டது. அப்போது உருவான கலவரத்தில் காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த  துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு பிறகு  மே 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் மூட உத்தரவு!

இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு ஆலையை மூட விதித்த தடை தொடரும் எனக்கூறி ஸ்டெர்லைட் நிர்வாகம்  தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து  ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்க சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. 
அதே நேரத்தில் தமிழகத்தில் நிலவிய ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க , ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 2வது ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்  தொடக்கம்!

அதில்  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் 3 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்தது. இதனையடுத்து   வேதாந்தா நிறுவனம்  இடைக்கால மனுவை தாக்கல் செய்தது. அதில்  ஆலையில் உள்ள இயந்திர உபகரணங்கள் துருப்பிடித்து சேதமாகும் நிலை உருவாகியுள்ளது எனத் தெரிவித்திருந்தது.  ஸ்டெர்லைட்டின் கோரிக்கையை உச்சநீதிமன்றம்  நிராகரித்து உத்தரவிட்டது. இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அரசு உத்தரவால் தொடர்ந்து ஆலை மூடப்பட்டு இருக்கும் நிலையில் அதனை வாங்க விரும்புபவர்கள் ஜூலை 4 மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web