உஷார்! 17,000யை கடந்தது தினசரி கொரோனா பாதிப்பு!

 
கொரோனா

 


இந்தியாவில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா தினசரி தொற்று எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தொற்று எண்ணிக்கையால் மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதும் அதிகரித்து வருவது  சுகாதாரத்துறையினருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன.தொற்று அதிகரித்து வரும் மாநிலங்களில் கொரோனா பரவலை குறைப்பது குறித்து மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும் முன்னெச்சரிக்கை எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்து வருகிறது.

கொரோனா

இந்நிலையில் நேற்று இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 11,739 ஆக இருந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அது 17,073 ஆக அதிகரித்துள்ளது. வார இறுதி நாட்களில் மக்கள் பொது இடங்களில் அதிகளவில் கூடுவதால்தான் இந்த அளவுக்கு தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,34,07,046 ஆக பதிவாகி உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கொரோனா

இந்தியாவில் கடந்த ஒரே நாளில் கொரோனா பலி எண்ணிக்கை 21 ஆக பதிவாகி உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5,25,020 ஆக பதிவாகி உள்ளது. 15,208 பேர் கடந்த ஒரே நாளில் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் மொத்தம் 4,27,87,606 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 

தற்போது நாடு முழுவதும் மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 92,576ல் இருந்து 94,420 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் 1 லட்சத்தை நோக்கி தொற்று அதிகரிக்கும் அபாய சூழ்நிலை உருவாகி உள்ளது.

இந்தியாவில் இதுவரை 1,97,11,91,329 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரே நாளில் 2,49,646 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.நாளுக்கு நாள் கொரோனா தினசரி தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் தாங்களாகவே முன் வந்து தனி கவனம் செலுத்தி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று மத்திய அரசும், சுகாதாரத்துறையும் கேட்டுக் கொண்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web