லட்சக்கணக்கில் சேதம்! எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து சிதறிய வாகனங்கள்! ஷோ-ரூமில் பெரும் சேதம்!

 
ஷோரூம் தீ விபத்து

டூ-வீலர் ஷோ-ரூம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்ததில், பிற வாகனங்கள் அனைத்தும் தீயில் கருகி, லட்சக்கணக்கில் சேதமானது. பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து இருப்பதால் உலகம் முழுவதும் ஏரிபொருள் வாகனங்களுக்கு மாறாக எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த மக்களும் அரசுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. சுற்றுச்சூழல் மாசும் குறையும் என்பதால் மின்சார வாகனங்களின் மீதான ஆர்வம் அதிகரித்து உள்ளன.

அண்மைக் காலமாக நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் அவற்றின் பேட்டரிகள் தீப்பிடித்து விபத்துக்குள்ளாவது அடிக்கடி நிகழ்கிறது. முக்கியமாக மின்சார இரு சக்கர வாகனங்களில் இந்தப் பிரச்னை அதிகம் உள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் நாகுரியில் ஹமீத் என்ற நபருக்குச் சொந்தமான ஸ்மார்ட் சிட்டி மோட்டார்ஸ் என்ற ஒகினாவா டீலர்ஷிப் விற்பனை மையம் உள்ளது.

ஷோரூம் தீ விபத்து

அப்போது வழக்கம் போல நிறுத்திவைக்கப்பட்ட ஒரு இருசக்கர வாகனத்தின் பேட்டரி வெடித்து விற்பனை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த புதிய பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டர்கள் தீயில் கருகின. 

தகவல் அறிந்த  தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர் பல லட்சம் மதிப்புள்ள ஸ்கூட்டர்கள் எரிந்து சாம்பலாகி உள்ளன. ஷோரூம் எரிந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web