பிறந்த குழந்தைக்கு மரண தண்டனை!! அதிர்ச்சியளிக்கும் விநோத விசித்திர மூடநம்பிக்கை!!

 
ஜாராவா

உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் வெகு சிலரே நவீன வசதிகளை ஏற்றுக் கொண்டு வாழ்கின்றனர். பலரும் தங்களின் பழமையான பழக்க வழக்கங்களையும், நடைமுறைகளையும் கடைப்பிடித்து வாழ்ந்து வருகின்றனர். அதில் பெரும்பாலான மூடப்பழக்கங்களும் உண்டு. இந்தியாவில் எல்லையோர தீவுகளான  அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில்  காலம் காலமாக ஜாரவா பழங்குடியினர்.  வசித்து வருகின்றனர்.

ஜாராவா

ஜாரவா என்றால்  “மண்ணின் மைந்தர்கள்” என்று பொருள். இவர்கள்  இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தாலும் இந்தியர்களின் மரபணு இவர்களின் உடலில் இல்லை எனவும் இவர்கள் பசிபிக் தீவை சேர்ந்தவர்கள் எனவும் மரபணுச் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. ஜாரவா பழங்குடியினர் தங்கள் வித்தியாசமான வாழ்க்கை முறையால் உலக மக்களிடம் இருந்து வேறுபட்டுள்ளனர். இங்கு வசிக்கும் பெண்களுக்கு வெள்ளை நிறத்தில்  குழந்தை பிறந்தால் அந்த குழந்தையை அவர்கள் கொலை செய்து  விடுவார்கள் என அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


உலகின் மிக தொன்மையான பழங்குடிகளாக கருதப்படும் ஜாரவா பழங்குடியினர் மொத்தம் வெறும் 380 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். இவர்களும் வெளி உலக தொடர்பு ஏதும்  இன்றி தனிமையில் வாழ்கின்றனர். இவர்கள்  விலங்குகளையும் , மீன்களையும் வேட்டையாடி உயிர் வாழ்ந்து வருகின்றனர் . இவர்களிடம் உள்ள பல விசித்திரமான விஷயங்களில் பிறக்கும் குழந்தைக்கு கூட மரண தண்டனை விதிப்பதுதான் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. குழந்தை நிறமாக வெள்ளை நிறமாக பிறப்பதற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்டதால் மக்கள் கறுப்பாக இருப்பார்கள்.

ஜாராவா

அத்தகைய சூழ்நிலையில், ஒரு பெண்ணுக்கு வெள்ளையாக குழந்தை பிறந்தால், இந்த பழங்குடியினர் அந்த குழந்தையை ஏற்காமல் கொலை செய்து விடுகின்றனர். இங்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் குலப் பெண்கள் அனைவரும் தாய்ப்பால் கொடுப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. இதனை உறுதி செய்ய  கர்ப்பிணிப் பெண்ணுக்கு விலங்குகளின் ரத்தம் வழங்கப்படும். இதையும் தாண்டி வெள்ளை நிறமாக பிறக்கும் குழந்தைகளை அவரது தந்தையே கொலை செய்து விடுகிறார் இது மூடநம்பிக்கையின் உச்சமாக உள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை