இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதி! குவிந்த கூட்டம்!

 
இன்று முதல் சதுரகிரி மலையேற அனுமதி! CONDITIONS APPLY!

இன்று பிரதோஷ தினத்தை முன்னிட்டும், நாளை  மறுதினம் ஆனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டும், இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு சதுரகிரி மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்களுக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம்.

இன்று முதல் சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை!

இந்நிலையில், பிரதோஷம் இன்றும் (26ம் தேதி) , வருகிற 28-ம் தேதி ஆனி மாத அமாவாசையும் வருகிறது. இதையட்டி, 4 நாட்களுக்கு கோவிலில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இதன் மூலம் இன்று முதல் வருகிற 29-ம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் கூறும்போது, ‘‘நாளை காலை காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். இரவு நேரங்களில் கோவிலிலும், அதை சுற்றிய மலைப்பகுதிகளிலும் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது.

சதுரகிரி
10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களும் கோவிலுக்கு வருவதற்கு அனுமதி கிடையாது. ஓடைகளில் இறங்கி குளிக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. எனவே அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் பட்சத்தில் மக்களின் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளது.

தொடர்ந்து 4 நாட்கள்  சாமி தரிசனம் செய்ய பொது மக்கள் அனுமதிக்கப்படுவதால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் திரள துவங்கியது. இன்று சிவனுக்குகந்த  பிரதோஷ தினம் என்பதால், காலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் கூட துவங்கியது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web