இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி!! காலை முதலே குவியத் தொடங்கிய மக்கள் !!

 
இன்று முதல் சதுரகிரி மலையேற அனுமதி! CONDITIONS APPLY!

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி மலை அமைந்துள்ளது. இங்கு சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு அமாவாசை , பௌர்ணமி, பிரதோசம் மிக சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் நாளை மறுநாள்  ஆடி அமாவாசை  அனுசரிக்கப்பட உள்ளது. நாளை பிரதோசம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக 2 ஆண்டுகளாக மலையேற அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பக்தர்களுக்கு மலையேற அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று முதல் சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை!

அதன்படி இன்று முதல் 30ஆம் தேதி வரை பக்தர்கள் மலையேற மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். ஆடி அமாவாசைக்கு தமிழகத்தின் மற்ற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தரலாம் என  மாவட்ட நிர்வாகம் எதிர்பார்த்து வருகிறது. இதற்குரிய முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் வனத்துறை கேட்டின் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மலைப்பாதையில் 5 இடங்களில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

சதுரகிரி

மேலும் பாதுகாப்பு பணியில் விருதுநகர், மதுரை மாவட்ட போலீசார், வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் ஈடுபட உள்ளனர். பக்தர்கள் காலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.அதே நேரத்தில் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. பிரதோஷம் மற்றும் ஆடி அமாவாசையன்று சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web