இயக்குனர் அமீரின் தாயார் மரணம்! ரசிகர்கள் அஞ்சலி!

 
அமீர்

திரைப்பட இயக்குனர், நடிகர் அமீரின் தாயார் வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்தினார். 

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான ராம் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார் அமீர். அதன் பின்னர், சூர்யாவின் நடிப்பில் இவர் இயக்கிய மௌனம் பேசியதே படம் நல்ல பெயர் வாங்கி தந்தது. தமிழ் சினிமாவில் இவரது இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படம் அமீர், கார்த்தி, ப்ரியாமணி என அனைவருக்குமே ரசிகர்களிடையே பெரும் அங்கீகாரத்தை தர வைத்தது.

அமீர்

நடிகர் கார்த்தி, பல வருடங்கள் பருத்தி வீரன் கார்த்தியாகவே சிறந்த அறிமுகமாக கொண்டாடப்பட்டார். அதன் இயக்குனர் அமீர் நடிப்பிலும் கவனம் செலுத்த தொடங்கி, சில படங்களில் நடிக்கவும் செய்தார்.

இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான அமீரின் தாயார் பாத்துமுத்து பீவி வயது முதிர் காரணமாக மதுரையில் அவரது வீட்டில் இயற்கை எய்தினார். அவரது உடல் மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web