ரசிகர்கள் அதிருப்தி! பும்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் சிராஜ்!

 
பும்ரா

பும்ராவுக்கு பதிலாக டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சிராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக காயம் ஏற்பட்டது. இதனால் அந்த தொடரில் அவர் ஆடவில்லை. அதன்பின் ஆஸ்திரேலிய தொடருக்கு திரும்பி வந்தார். ஒரு போட்டி மட்டுமே ஆடிய அவர் மீண்டும் காயம் காரணமாக வெளியேறினார்.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் பும்ரா இடம்பெற்றிருந்த நிலையில், காயம் காரணமாக பும்ரா களமிறங்கவில்லை. இந்த நிலையில், பும்ராவை பரிசோதித்த மருத்துவர்கள் அடுத்து வரும் போட்டியில் அவர் ஆட முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.

முகம்மது சிராஜ்

இதையடுத்து முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டி, டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார் பும்ரா, டி20 உலககோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பும்ரா- ஷமியின் மிரட்டல் ஆட்டத்தில் 272 ரன்கள் இலக்கு நிர்ணயம்!

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மீதமுள்ள 2 போட்டிக்கு இந்திய அணியில் பும்ராவுக்கு மாற்றாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இதை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. டி20 உலககோப்பை தொடருக்கு பும்ராவுக்கு மாற்று வீரராக இன்னும் யாரும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web