நாளை மறுநாள் முதல் மாவட்ட வாரியான செஸ் போட்டிகள்!! மாணவர்களே மிஸ் பண்ணீடாதீங்க!!

 
செஸ்

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழகத்தில் சென்னையில் மாமல்லபுரத்தில்   ஜூலை மாதம் 27ம் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை சிறப்பான முறையில் தமிழகத்தில் நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  உலகளவில் செஸ் போட்டியில் சிறந்து விளங்கக்கூடிய முன்னணி வீரர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்ளனர். 

செஸ் ஸ்டாலின்

இதில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனா். இந்த போட்டியை மிக பிரமாண்டமான முறையில் நடத்திட தமிழக அரசு பல்வேறு  ஏற்பாடுகளை  செய்து வருகிறது. 

 செஸ் ஒலியம்பியாட் போட்டி

இந்நிலையில்  10-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை தமிழகத்தில் மாவட்ட வாரியாக செஸ் போட்டிகளை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .தமிழக அரசு, அகில இந்திய செஸ் கூட்டமைப்பும் இணைந்து செஸ் தொடரை நடத்துகின்றன. செஸ் தொடரில் பங்கேற்க விரும்பும் மனவர்கள் https://prs.aicf.in/players-ல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web