திடீர் ஆய்வில் மருத்துவர் சஸ்பெண்ட்!! அமைச்சர் அதிரடி!!

 
கொரோனா வார்டு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அய்யங்கோட்டை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு  வருகிறது. இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொள்வார் என்று சற்றும் எதிர்பார்க்காக ஊழியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ந்து போனார்கள்.

தீபாவளி முன்னேற்பாடுகள்! தீக்காய சிறப்பு சிகிச்சை வார்டு!

மருத்துவமனைக்கு உள்ளே சென்ற அமைச்சர், நோயாளிகள் மருந்து வாங்கும் இடங்கள் மற்றும் மருத்துவமனை வளாகம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் மருத்துவரின் அறைக்கு சென்ற போது மருத்துவர் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது பணியில் பூபேஷ் என்ற மருத்துவர் பணியில் இருந்திருக்க வேண்டும்.

மா.சுப்பிரமணியன் கொரோனா

உடனே அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவர் பூபேஷ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு இது குறித்து விளக்கம் கேட்டார். இதைத்தொடர்ந்து  பணி நேரத்தில் தனது அறையில் இருந்தபடி பணி மேற்கொள்ளாத மருத்துவர் பூபேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்வதற்கான அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இதற்கு முன்னதாக உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அதன் பின்னர் பணியிடை நீக்க உத்தரவை அறிவித்தார். மக்கள் சேவையின் போது பணியில் இல்லாத மருத்துவரை எந்த பாரபட்சமுமின்றி பணியிடை நீக்கம் செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும் அங்கிருந்த பொது மக்கள் அவரை மனதார வாழ்த்தினார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web