டொனால்டு ட்ரம்ப்பின் முதல் மனைவி காலமானார்! ட்ரம்ப் உருக்கம்!

 
இவானா டிரம்ப்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் முதல் மனைவி இவானா காலமானார். அவருக்கு வயது 73.

செக் ரிபப்ளிக் நாட்டில் பிறந்தவரான இவானா ட்ரம்ப், 1977-ம் ஆண்டில் அப்போது தொழிலதிபராக இருந்த டொனால்டு ட்ரம்ப் அறிமுகமானார். பின்னர் இருவருக்கும் இடையே உறவு ஏற்பட்ட நிலையில், திருமணம் செய்து கொண்டனர். 1978-ம் ஆண்டில் இருவருக்கும் டொனால்டு ட்ரம்ப் ஜூனியர் முதல் குழந்தையாகப் பிறந்தார். பின்னர் 1981-ம் ஆண்டு மகள் இவாங்காவும், 1984-ம் ஆண்டில் மூன்றாவதாக மகன் எரிக்கும் பிறந்தனர்.

டொனால்டு பிரபல தொழிலதிபர் என்ற நிலையில், அவரது மனைவி இவானாவும் ட்ரம்ப்பின் தொழில்களில் பங்கெடுத்து கணவரின் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்றார். 80-ம் ஆண்டு காலகட்டங்களில் மிக உயர்ந்த பிரபலமான ஜோடிகளில் இவர்களும் ஒருவர். மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இந்த ஜோடி கடந்த 1992-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

இவானா டிரம்ப்

நியூயார்க்கில் உள்ள தன்னுடைய இல்லத்தில் இவானா வசித்து வந்த நிலையில், அங்கிருந்து நியூயார்க் நகர போலீசாருக்கு ஒரு அவசர போன் கால் வந்துள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்று போலீசார் பார்க்கும் போது, இவானா சுயநினைவின்றி விழுந்து கிடந்துள்ளார். அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இவானாவின் மரணத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்து இருக்கின்றனர். எனினும், அவரது பிரேத பரிசோதனைக்கு பின்னரே அவரது இறப்பிற்கான காரணம் தெரியவரும் எனவும் கூறியுள்ளனர். 

இவானா டிரம்ப்

இவானாவின் இறப்பு செய்தி கேட்டு முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உருக்கமான இரங்கலை தெரிவித்திருக்கிறார். அந்த பதிவில், “அவர் ஒரு அற்புதமான, அழகான மற்றும் அற்புதமான பெண், அவர் ஒரு சிறந்த மற்றும் உத்வேகமான வாழ்க்கையை நடத்தினார்.. அவளுடைய பெருமையும் மகிழ்ச்சியும் அவளது மூன்று குழந்தைகள், டொனால்ட் ஜூனியர், இவான்கா மற்றும் எரிக். நாங்கள் அனைவரும் அவளைப் பற்றி மிகவும் பெருமைப்படுவதைப் போல, அவள் அவர்களைப் பற்றி மிகவும் பெருமையாக இருந்தாள். இவானா நிம்மதியாக இரு!” என கூறியிருக்கிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web