மிஸ் பண்ணாதீங்க! ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம்!

 
exam தேர்வு மாணவிகள் பரீட்சை கல்லூரி

அவசரத்துல ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பத்தவர்களுக்கு கூடுதலாக ஒரு வாய்ப்பு. உங்களது விண்ணப்பத்தில் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் அதனை தற்போது மேற்கொள்ளலாம். ஜூலை 16ம் தேதி வரையில் இந்த திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக போட்டித் தேர்வுகள், பணிக்கான தேர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. நடப்பாண்டில் கொரோனா பரவல் குறைதிருப்பதால் தேர்வுகள் கொரோனாவிற்கு முந்தைய முறைப்படி நடத்தப்பட்டு வருகின்றன.  அந்த வரிசையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன.

அதிகாரப்பூர்வ இணையதளமான  http://www.trb.tn.nic.in/  ரூ.500 தேர்வு கட்டணத்துடன் தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்திருந்தனர். தாழ்த்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியினருக்கு தேர்வு கட்டணம் ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  சர்வரில் ஏற்பட்ட பிரச்சனைகளால் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தேர்வர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தேர்வு மாணவி முடிவுகள் பரீட்சை

இதனைத் தொடர்ந்து,ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வை ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள 9,000க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில், இரண்டு கட்டங்களாக தேர்வை நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இனி TET சான்றிதழ் ஆயுட்காலம் முழுவதும் செல்லும்!
இதில் அரசுப் பள்ளிகள்,சிறுபான்மையினர் நடத்தும் உதவி பெறும் பள்ளிகளில் பணியில் உள்ள 1500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிக்க அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக,2013ம் ஆண்டுக்கு முன் TRB மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் TET தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிக்க இருப்பதாகவும் இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை மூலம் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும்,மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 1 முதல் 8ம் வகுப்பு வரை பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான  விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்புபவர்கள்  தாள் 1,தாள் 2க்கு  ஜூலை 11ம் தேதி முதல் 16 ம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ  இணையதளத்தில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த தகவலை  ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 க்கு 2,30,878 பேரும், தாள் 2க்கு 4,01,886 என மொத்தமாக 6,32,764 பேர் விண்ணப்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web