இளைஞர்களே மிஸ் பண்ணீடாதீங்க!! அக்னிபாத் திட்டத்தில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!!

 
அக்னிபாத்

இந்தியாவில் முப்படைகளில் இளைஞர்களை அதிக அளவில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி  சமீபத்தில்  அக்னிபாத் திட்டத்தை அறிவித்தது.இத்திட்டத்திற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பலைகள், கிளர்ச்சிகள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று முதல் அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் சேர விண்ணப்பங்கள் வெளியிடப்பட உள்ளன. 

இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவர்களுக்கான தகுதிகள், விதிகள், நிபந்தனைகள்  குறித்த அறிவிப்பு ராணுவத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இதில் பொதுப்பணி, தொழில்நுட்பம், கிளார்க், ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன் பிரிவினருக்கான முன்பதிவு ஜூலையில் தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

அக்னிபாத்
மேலும் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன்  24ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அத்துடன் இதற்கான ஆன்லைன் தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறும் என  இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. careerindianairforce.cdac.in என்ற அதிகாரப்பூர்வ இந்திய விமானப்படை இணையதளத்தில்  விண்ணப்பிக்கலாம் .


அதே நேரத்தில் ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்துக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு நீடித்து வருகிறது. மத்திய அரசு இத்திட்டத்தின் கீழ் இளைஞர்களை சேர்க்கும் பணிகளில் முப்படைகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இதே போல் கடற்படை மற்றும் விமானப்படையில் ஆள்சேர்ப்புக்கான அறிவிப்புகளும் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முப்படை தளபதிகள்
இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ், ஜூலை 24ம் தேதியில் இருந்து ஆன்லைன் தேர்வு நடைபெறும் என விமானப்படை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, முப்படைகளுக்கு தற்காலிகமாக 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியவும், அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப் படையில் சேரவும் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜூன் 24 முதல் ஜூலை 5ஆம் தேதி வரை விமானப் படை இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விமானப் படையில் சேர்வதற்கு, https://indianairforce.nic.in/ அல்லது https://www.careerindianairforce.cdac.in/ என்ற இணையதளங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அக்னிபாத் திட்டத்தில் சேர டிகிரி, இன்ஜினியரிங், டிப்ளமோ, 12ம் வகுப்பு  முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் வெளியிடப்பட்ட ஒரே வாரத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல்  கடந்த 3 நாட்களில்  மட்டும் 59960 பேர் விண்ணப்பம் செய்திருப்பதாக விமானப்படை தெரிவித்துள்ளது.இத்திட்டத்தில் விண்ணப்பிக்க இன்று ஜூலை 5ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடைய இளைஞர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களை agnipath vayu.cadc.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web