நூல் விலை அதிரடி குறைப்பு!! மகிழ்ச்சியில் பின்னலாடை உற்பத்தியாளர்கள்!!

 
பின்னலாடை

திருப்பூர் மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட  பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்பில் முக்கிய மூலப்பொருள் நூல் தான். இங்கு இருக்கும் பின்னலாடை நிறுவனங்கள்  நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு வருவதால், ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படுவதாக நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.

நூல்

கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி நூல் விலை அதிகரித்து வருகிறது. இதன் அடிப்படையில் நூல் விலையை குறைக்க வலியுறுத்தி திருப்பூரில் போராட்டம் நடத்தப்பட்டது. ஏப்ரல் மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ. 30 உயர்ந்திருந்தது. மே மாதம் மேலும் ரூ.40 உயர்த்தப்பட்டன.  இதனால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். நூல் விலை உயர்வை கண்டித்தும், அதனை குறைக்க வலியுறுத்தியும், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மாதம் நூல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை . ஜூலை மாதத்திற்கான நூல் விலைகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.  

திருப்பூர்

இதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.40 குறைந்திருந்தது. அதன்படி ஒரு கிலோ 20ம் நம்பர் கோம்டு நூல் ரூ.363க்கும், 24-ம் நம்பர் ரூ.375க்கும், 30ம் நம்பர் ரூ.385-க்கும், 34ம் நம்பர் ரூ.405க்கும், 40ம் நம்பர் ரூ.425க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.355க்கும், 24-ம் நம்பர் ரூ. 365க்கும், 30-ம் நம்பர் ரூ.375க்கும், 34-ம் நம்பர் ரூ. 395க்கும், 40ம் நம்பர் ரூ.415க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மத்திய அரசு பஞ்சுக்கான இறக்குமதி வரியை குறைத்ததால் நூல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web