கல்வித்துறை அறிவிப்பு! பதவி உயர்வுக்கான கலந்தாய்வு கூட்டம் 2 வாரங்கள் ஒத்தி வைப்பு!

 
தலைமை ஆசிரியர்

பட்டதாரி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான கலந்தாய்வு கூட்டம் இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையில் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு ஜூலை 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்திருந்தார். 

ஆசிரியர்கள் கூட்டம் பெண்கள்

இந்நிலையில், தலைமை ஆசிரியர்களான ஈரோட்டை சேர்ந்த ராஜவேலு, சேலத்தை சேர்ந்த அருள்முருகன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், முதலில் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்திவிட்டு, அதன்பிறகு பதவி உயர்வுக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில், தலைமை ஆசிரியர்களாக 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்து உள்ளதால், பணியிட மாறுதலுக்கு முழு தகுதி இருப்பதால், பதவி உயர்வுக்கான கலந்தாய்வை நடத்துவதற்கு முன்பாக பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வை நடத்த வேண்டுமென வாதிடப்பட்டது.

ஆசிரியர்கள் கூட்டம் பெண்கள்

அரசு தரப்பில், பணியிட மாறுதல் தொடர்பான சட்ட நுணுக்கங்களை ஆராய வேண்டி உள்ளதால், விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் எனவும், இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்கக் கூடாது எனவும் வாதிடப்பட்டது.இதையடுத்து, ஆசிரியர் நியமனத்தை பொறுத்தவரை ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, ஜூலை 13-ம் தேதி நடக்க உள்ள பதவி உயர்வுக்கான கலந்தாய்வை 2 வாரங்கள் தள்ளிவைக்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு விசாரணையை  ஜூலை 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web