போச்சே!! ஒரு லட்சம் எரிஞ்சு போச்சே!! சார்ஜ் ஏற்றிய போது மளமளவென பற்றி எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!!

 
மின்சார ஸ்கூட்டர்

திருநெல்வேலி மாவட்டம் நெல்லை பேட்டை அருகே உள்ள கொண்டாநகரம் கிராமத்தில் வசித்து வருபவர்  42 வயது  டேனியல் ஆசீர்.இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதால் பணி காரணமாக சமீபமாக மின்சார ஸ்கூட்டர் வாங்கினார். நேற்று காலையில்  வீட்டின் முன்பு மின்சார ஸ்கூட்டருக்கு மின் இணைப்பு மூலம் சார்ஜ் ஏற்றி கொண்டிருந்தார்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தீ

அப்போது திடீரென மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீப்பிடித்த மின்சார ஸ்கூட்டரை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக  டேனியல் ஆசீர் மின்சார ஸ்கூட்டரின் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இருந்த போதிலும் மளமளவென பரவிய தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதுகுறித்து பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தார்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தீ

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்  மின் இணைப்பை துண்டித்து தீயை அணைத்தனர்.அதற்குள்  மின்சார ஸ்கூட்டர் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மின்சார ஸ்கூட்டரின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம். பல்வேறு இடங்களிலும் மின்சார ஸ்கூட்டர்கள் திடீரென்று தீப்பிடித்து எரிந்து வந்த நிலையில், திருநெல்வேலியிலும் மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web