இன்று அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம்!!

 
அமித்ஷா

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதிலும் கடந்த சில வாரங்களாக இவை மேலும் தீவிரமடைந்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. கடந்த வாரத்தில்  வங்கி அதிகாரி சுட்டு படுகொலை செய்யப்பட்ட  நிலையில் அடுத்த சில மணி நேரத்திலேயே மேலும் ஒருவர் கொல்லப்பட்டு இருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

கொலை

அப்பாவி மக்கள், அரசு ஊழியர்கள், சிறுபான்மையினர், காவல்துறையினர் என பாரபட்சமில்லாமல் பயங்கரவாதிகள் கொலை செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். மே மாதம்  தாசில்தார் அலுவலகத்தில் நுழைந்த பயங்கரவாதிகள், பண்டிட் பிரிவை சேர்ந்த ராகுல் பட் என்ற ஊழியரை சுட்டுக் கொன்றனர். அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  2 போலீசாரையும் கொலை செய்தனர். அதே போல்  ஒரே வாரத்தில் 2 ஆசிரியைகள் சுடப்பட்டனர்.  இதனால், பொதுமக்கள், அரசு ஊழியர்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது . இந்நிலையில், குல்காம் மாவட்டத்தில் வங்கியின் மேலாளர்  பயங்கரவாதியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

துப்பாக்கி

வங்கி மேலாளர் கொல்லப்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே  புலம்பெயர் தொழிலாளர்கள் 2 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர். இதில் படுகாயம் அடைந்த மற்றொருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதனிடையே காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் அமித்ஷா தலைமையில் நடைபெற உள்ள உயர்மட்ட பாதுகாப்பு ஆய்வு கூட்டத்தில் பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிப்பது குறித்து  தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் தீவிர ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web