இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!!! பதற்ற நிலை நீடிப்பு!!

 
இலங்கை

இலங்கையில் மீண்டும் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அங்கு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அதிபர் பதவி விலகினர். இதனையடுத்து  கோத்தபாய ராஜபக்சே அதிபராக பதவியேற்றார். இவரும் , நாட்டை விட்டு தப்பி ஓடி மாலத்தீவில் தஞ்சமடைந்தார். கோத்தபாய நாட்டை விட்டு ஓடினாலும் மக்கள் கோபம் அடங்கவில்லை.  தற்காலிக ஜனாதிபதியாக  ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

ரணில் மீதும் மக்கள் ஏற்கனவே கோபத்திலும் அதிருப்தியிலும் உள்ளனர். இந்நிலையில் ரணில், தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்க கூடாது என பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அத்துடன் கோத்தபாய ராஜபக்சே தப்பி ஓடுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உதவியதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.  இன்று காலை நாட்டின் பல பகுதிகளில் இருந்து கொழும்பில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அலுவலகம் நோக்கி சாரை சாரையாக படையெடுத்து வருகின்றனர். தற்போது கொழும்பில் அதி உச்ச பதற்றம் நிலவி வருகிறது.

கொழும்பில் பிரதமர் ரணில் அலுவலகம் முன்பாக குவிந்த மக்கள் அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். விமானப் படை ஹெலிகாப்டர்கள் அப்போது பெருமளவில் குவிக்கப்பட்டிருந்த ராணுவத்தினரும் போலீசாரும் பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்தனர். பொதுமக்களை நோக்கி கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் விமானப் படை ஹெலிகாப்டர்கள் வானில் பறந்தபடியே மிரட்டின.

இலங்கை போராட்டம்

அதிரடி உத்தரவுகள் ஜனாதிபதி கோத்தபாய அலுவலகத்தைப் பொதுமக்கள் கைப்பற்றியது போல, பிரதமர் அலுவலகமும் பொதுமக்கள் வசமாகும் நிலை உள்ளது. இதனையடுத்து இலங்கை முழுவதும் அவசரநிலையை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  அத்துடன் . வன்முறைகளில் ஈடுபடுகிற நபர்களை கைது செய்ய வேண்டும் என்றும் ரணில் உத்தரவு பிறப்பித்துள்ளார். போராட்டங்களில் ஈடுபடும் பொதுமக்களை அழைத்துச் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் ராணுவத்துக்கு முழு அதிகாரம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web