சோனியாகாந்திக்கு அமலாக்கப்பிரிவு சம்மன்!! பரபரக்கும் அரசியல் களம்!!

 
சோனியா

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மனைவியும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான சோனியாகாந்திக்கு அமலாக்க துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். அதன் மூலம்  நேஷனல் ஹெரால்டு என்ற நாளேடு தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தை நடத்த கடனாக ரூ.90 கோடியை காங்கிரஸ் கொடுத்தது.

சோனியா குலாம் நபி ஆசாத்

இந்த கடனை திருப்பிச் செலுத்தாமல் நேஷனல் ஹெரால்ட் நிறுவனம் நஷ்டப்பட்டதால் 2008ல் நாளேடு நிறுத்தப்பட்டது. அதற்குபிறகு  2016 முதல் நேஷனல் ஹெரால்ட் நாளேடு நடத்தப்பட்டு வருகிறது.இந்த நிறுவனத்தின் பங்குகளை ரூ.50 லட்சத்துக்கு யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. அதில் பங்குதாரர்களின் ஒப்புதல்களைப் பெறவில்லை. மேலும் இந்நிறுவனத்தின் 76% பங்குகள் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடமும், மீதமுள்ள 24 % பங்குகள் ராகுல் காந்தியிடமும் உள்ளன. 

சோனியா பிரியங்கா
சுமார் ரூ.2000 கோடி மதிப்புள்ள அசோசியேட்டட் ஜர்னல் பங்குகளை வெறும் ரூ.50 லட்சத்துக்கு மாற்றியதில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணியன்சுவாமி  வழக்குத் தொடர்ந்தார். இதுகுறித்து விளக்கமளிக்க  காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, எம்.பி.ராகுல் காந்திக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 


சோனியா காந்தி திடீரென கொரோனாவில் பாதி்க்கப்பட்டார். இதனால் ஜூன் 2ம் தேதி அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு நேரில் ஆஜராக முடியவில்லை. தற்போது கொரோனா சரியானதை அடுத்து ஜூன் 23ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என  அமலாக்கப்பிரிவு நேற்று மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
ராகுல்காந்தி ஜூன்13ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். இந்த வழக்குத் தொடர்பாக ஏற்கெனவே காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, பவான் பன்சால் இவர்களிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web