ஷ்...ப்பா...! என்னா வெய்யிலு? உடம்பை சில்லுன்னு வெச்சுக்க உற்சாக பானம்! ரொம்ப ஈஸியான ரெசிப்பி!
சாப்பாட்டுக்கு பிறகு விருந்துகளில் வெற்றிலை போடுவது நமது பாரம்பரிய வழக்கம். தென் இந்தியாவில் வெற்றிலை பாக்கும், வட இந்தியாவில் பீடாவும் நடைமுறையில் இருந்து வருகிறது. வெற்றிலையால் செரிமானசக்தி மேம்படுகிறது. வெற்றிலை உண்பதால் அபரிமிதமான பலன்கள் ஏற்படலாம் என்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள். அத்துடன் இருமல், ஆஸ்துமா, தலைவலி, நாசியழற்சி, மூட்டுவலி, பசியின்மை இவற்றிற்கான ஒரே தீர்வாக வெற்றிலை அமைகிறது. மேலும் வலி, வீக்கம் மற்றும் கட்டிகள் போன்ற கோளாறுகளுக்கு அருமருந்தாக திகழ்கிறது. வெற்றிலையை தொடர்ந்து உட்கொள்வது மனித உடலின் வாத மற்றும் கபத்தை சமநிலையில் வைக்கலாம். வெற்றிலை உண்பதால் வாய் துர்நாற்றத்தை நீக்கி புத்துணர்ச்சி அடைகிறது. வெற்றிலை வலி நிவாரணியாகவும், செரிமான பிரச்சனைகளுக்கான தீர்வாகவும், பசியை தூண்டக்கூடியதாகவும், தலைவலி மருந்தாகவும், மலமிளக்கியாகவும் செயல்படக்கூடியது. இதையே வெயில் அதிகம் உள்ள காலங்களில் புத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் எடுத்துக் கொள்ளலாம். இதோ அதற்கான செய்முறை
'பான் ஷாட்' செய்யத் தேவையான பொருட்கள்

வெற்றிலை - 5
குல்கந்த் - சிறிதளவு
பெருஞ்சீரகம் - சிறிதளவு
கற்கண்டு - சிறிதளவு
தேங்காய் துருவல் - சிறிதளவு
செய்முறை:

வெற்றிலை துண்டுகளை சுத்தம் செய்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். குல்கந்த், பெருஞ்சீரகம், கல்கண்டு, தேங்காய் துருவல் இவைகளை தண்ணீர் சேர்க்காமல் அரைத்த பின் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்தெடுக்க வேண்டும். வெற்றிலையுடன் குல்கந்த், தேங்காய் துருவல், பெருஞ்சீரகம் சேர்க்கப்படுவதால் குளிர்ச்சியான பானமாகிறது. இதற்கு பான் ஷாட் எனப் பெயர். இதனை தினசரி குடித்து வந்தால் கோடை வெப்பத்தை எளிதாக தணிக்கலாம். அத்துடன் உடலும் சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும் பெறுவதை அனுபவப்பூர்வமாக உணரலாம்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
