பரபரக்கும் அரசியல் களம்!! குடியரசு தலைவர் தேர்தல் !! முதல்வர் ஆலோசனைக்கூட்டம்!!

 
ஸ்டாலின்

இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் . இவர் நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக  2017ம் ஆண்டு பதவியேற்றார். அவரின் பதவிக்காலம்  ஜூலை 24 ம் தேதியுடன் முடிவடைய உள்ளது . இதனையடுத்து அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ம் தேதி நடத்தப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஸ்டாலின்
இந்நிலையில், தமிழகத்தில் திமுக 133 எம்எல்ஏக்கள் 34 எம்பிக்கள் பலத்துடன் இருந்து வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் இந்தியா முழுவதும் உள்ள 22 கட்சி தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்”குடியரசுத்தலைவர் தேர்தலுக்கு நாம் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும்.அதற்கு தங்களது கட்சி எம்பிக்கள்,எம்எல்ஏக்களின் பங்களிப்பு வேண்டும்” என வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இன்றுடன் ஓயும் தேர்தல் பிரச்சாரம்!கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள்!
தமிழகத்தில் குடியரசுத்தலைவர் தேர்தல் குறித்து ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்கள் கேஎன் நேரு, பொன்முடி, நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலு உட்பட பலர் கலந்து கொண்டு ஆலோசித்து வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web