வீடியோ! இளம் பெண்ணுடன் முன்னாள் அமைச்சர்! அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவிப்பு!

 
பரத்சிங்

முன்னாள் அமைச்சர் ஒருவர், இளம்பெண்ணுடன் இருக்கும் வீடியோ வைரலானதை அடுத்து, அரசியலை விட்டு சில காலம் ஒதுங்கி இருக்க போவதாக அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், குஜராத் காங்கிரஸ் செய்வதறியாது திகைத்துள்ளனர். என்ன தான் அரசியல்வாதியாக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும், ஒரு நாள் மெயின் ரோட்டிற்கு வந்து தான் தீரவேண்டும்? என்பது மாநிலங்களைக் கடந்து தேசம் முழுவதும் ஒரே மாதிரியான நிர்பந்தமாக தான் இருக்கும் போல..  இரண்டு முறை குஜராத் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் பரத்சிங் சோலங்கி.

குஜராத் காங்கிரஸில் முக்கிய தலைவர்களில் ஒருவராக அறியப்படும் இவர், இளம்பெண் ஒருவருடன் தனிமையில் சொகுசு ஹோட்டல் ஒன்றின் அறையில் இருக்கும் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Bahratsinh-solain

பரத்சிங் சோலங்கி வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதை கையும் களவுமாகப் பிடித்த அவரது மனைவி ரேஷ்மா படேல், ஹோட்டல் அறைக்குள் புகுந்து அவரை அம்பலப்படுத்தினார். இணையத்தில் வைரலாக பரவும் அந்த வீடியோவில் பரத்சிங் சோலங்கியின் மனைவி ரேஷ்மா படேல் சிலருடன் ஹோட்டல் அறை ஒன்றில் நுழைகிறார்.


பின்னர் அந்த இளம் பெண்ணுடன் இருந்த பரத் சிங் சோலங்கியை ரேஷ்மாவும் அவருடன் சென்றவர்களும் தாக்கியிருக்கிறார்கள். இதை பாரத்சிங் சோலங்கி தடுக்க முயல்வதும் அந்த வீடியோவில் தெளிவாக பதிவாகி உள்ளது. இருப்பினும் இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தாக்கும் ரேஷ்மா படேல், 'நீ என் கணவருடன் இருக்கிறாய்... நான் உன்னை விடமாட்டேன்...' என்று கூறிக் கொண்டே ஆவேசமாகத் தாக்குகிறார்.

பரத்சிங்

இந்த ஆண்டு இறுதியில குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில காங்கிரசுக்கு இந்த வீடியோ தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாகக் காங்கிரஸ் கட்சி எந்தவொரு விளக்கத்தையும் இதுவரை அளிக்கவில்லை.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web