வெடித்த சொத்துப் பிரச்சனை!! சிவாஜி மகள்கள் நடிகர் பிரபு மீது வழக்கு!!

 
சிவாஜி குடும்பம்

1952-ம் ஆண்டு 'பராசக்தி' படத்தின் மூலம் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கியவர் நடிகர் திலகம், சிவாஜி கணேசன். இந்த படத்தில் இவர் பல காட்சிகளில் உபயோகித்த வார்த்தை சக்ஸஸ் தான். அன்று தொடங்கிய அவரது சக்ஸஸ் பயணம், திரையுலகில் கடைசி வரை சக்ஸஸ் மன்னனாகவே பார்க்கப்பட்டார். இவருக்கு பிரபு, ராம்குமார் என இரு மகன்களும், சாந்தி, ராஜ்வி என இரு மகள்களும் உள்ளனர்.

பிரபு, ராம்குமார் இருவருமே படங்களில் நடித்துள்ளனர். பிரபு தற்போது வரை பல படங்களில் நடித்து வருகிறார். ராம்குமார், தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், நடிகர் விக்ரம் பிரபுவும் தற்போது பிரபல ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.

பிரபு

கடந்த 2001-ம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் மறைவுக்கு பின், 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும், வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த மனுவில், “இந்து வாரிசுரிமை சட்டத்தில் 2005-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தம் காரணமாக, தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கும் உரிமை உள்ளதால் பாகப்பிரிவினை செய்து தர உத்தரவிட வேண்டும். மேலும், தங்களுக்கு தெரியாமல் தந்தை சொத்துக்களை அவர்கள் விற்றுள்ளனர். 

சிவாஜி

அந்த விற்பனை பத்திரங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும். ஆயிரம் சவரன் தங்க நகைகளையும், 500 கிலோ வெள்ளி பொருள்களையும் பிரபுவும், ராம்குமாரும் அபகரித்துக் கொண்டனர். சாந்தி தியேட்டரில் இருந்த 82 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை பிரபுவும், ராம்குமாரும் அவர்களின் பெயருக்கு மாற்றியுள்ளனர்.

தந்தை சிவாஜி கணேசன் எழுதி வைத்ததாக கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது. பொது அதிகார பத்திரத்தில் கையெழுத்து பெற்று தங்களை ஏமாற்றி விட்டனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நடிகர் பிரபு, ராம்குமார் தவிர, இருவரின் மகன்களாக விக்ரம் பிரபு, துஷ்யந்த் ஆகியோரும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web