துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை!! கன்னியாகுமரியில் பரபரப்பு!!

 
ஜெயப்பிரகாஷ்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தேரூர் பகுதியில் வசித்து வந்தவர் ஜெயபிரகாஷ். இவர் கடந்த ஆண்டு 2014ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இதற்கு முன்னர் இவர் சொல்லோடு பகுதியில் வசித்து வந்தார். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தேரூர் பகுதியில் குடும்பத்துடன் சேர்ந்து வசித்து வந்தார். ஜெயபிரகாசுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக தெரிகிறது.

கன்னியாகுமரி

ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், நாகர்கோவிலில் செயல்பட்டு வரும் ஒரு வங்கியில் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்துள்ளார். ஜெயபிரகாஷ் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயபிரகாஷ் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இதைத்தொடர்ந்து ஜெயபிரகாஷ் வேலைக்கு செல்ல இன்று காலை எப்போதும் போல தயாராகி உள்ளார். திடீரென்று வீட்டில் உள்ள அறைக்குள் புகுந்த அவர் கதவை மூடி கொண்டார். இதை குடும்பத்தார் யாரும் கவனிக்கவில்லை.

இந்நிலையில் திடீரென்று அறைக்குள் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அவரது மனைவி குமாரி சாந்தி திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது ஜெயப்பிரகாஷ் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட நிலையில் ரத்த வெள்ளத்தில்  பிணமாக கிடந்துள்ளார். இதை கண்டதும் அதிர்ச்சியடைந்த குமாரி சாந்தி அழுது கூச்சலிட்டார்.

death

சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த சுசீந்திரம் போலீசார், ஜெயபிரகாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், ஜெயபிரகாஷ் உரிமத்துடன் வைத்திருந்த இரட்டைகுழல் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web