கண், மூக்கு அசையாது !! சிரிக்க முடியாது!! வைரலாகும் பிரபல பாப் பாடகர் உருக்கமான வீடியோ !!

 
பாப் பாடகர்


பாப் பாடகர்களில் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தையே பெற்றவர்  ஜஸ்டின் பீபர். இவர் மிகச் சிறு வயதிலேயே ”ஸ்டார்டம் “ அந்தஸ்தை பெற்றவர்  ஜஸ்டின் பீபர் கடந்த சில மாதங்களாக உடல் ரீதியிலான பிரச்சனையில் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகிறார். இது குறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் ஒரு மோசமான உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

shingles  என்னும் ஒரு வித தோல் பிரச்சனை காரணமாக , ர் Ramsay Hunt Syndrome  என்னும் தசை நரம்பு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் முகத்தின் ஒரு பக்கத்தில் தசை நரம்புகள் செயலழிந்துள்ளது. “ என்னால் ஒரு பக்கம் கண்களை அசைக்க முடியவில்லை. சிரிக்க முடியவில்லை.மூக்கும் அசையாது. எனது முகத்தின் ஒரு பக்கம் paralysis  வந்துவிட்டது. 
என்னுடைய  நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருப்பவர்.  நிகழ்ச்சியை ரத்து செய்வதால் பலருக்கு அது அதிருப்தியை ஏற்படுத்தலாம் அதனால் தான் இந்த பதிவை வெளியிடுகிறேன். எனது உடல்நிலை நிகழ்ச்சியில் பாடும் அளவிற்கு தகுதியானதாக இல்லை. எனக்கு 100 சதவிகிதம் ஓய்வு தேவை “ என தெரிவித்துள்ளார்.


கொரோனா காரணமாக  பல மாதங்கள் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. கொரோனாவிற்கு பிறகு ஜஸ்டின் 3 வது முறையாக தமது நிகழ்ச்சியை ஒத்தி வைத்துள்ளார். 28 வயதான பாப் பாடகர் ஜஸ்டின் டொராண்டோவில் தனது முதல் இசை நிகழ்ச்சிக்கு தயாராகும் சில மணி நேரங்களில் இந்த  பிரச்சனையை சந்தித்துள்ளார். Justice World Tour என்னும் பெயரில் கனடா , சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் ஜஸ்டின் பீபர் மற்றும் அவரது குழுவினர் இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்த சூழலில்தான் ஜஸ்டின் paralysis பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஜஸ்டினின் தற்போதைய நிலைக்கு அவருடைய  ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்,
 

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web