பிரபல ஹாலிவுட் நடிகை திருமணம்!! குவியும் வாழ்த்துக்கள்!!

 
அலெக்ஸாண்ட்ரா


பிரபல ஹாலிவுட் நடிகையானஅலெசாண்ட்ரா தத்தாரியோ& ஆண்ட்ரூ பார்ம் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் அலெக்சாண்ட்ராவுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவர் டுவைன் ஜான்சனுடன் இணைந்து பே வாட்ச் சான் ஆண்ட்ரியாஸ், ராம்பேஜ் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவருக்கும் பிரபல தயாரிப்பாளரான ஆண்ட்ரூ பார்முக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. ஆண்ட்ரூ பார்ம் ‘தி பர்ஜ்’ படத்தை தயாரித்ததுடன், அந்த படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

அலெக்ஸாண்ட்ரா

36 வயதாகும் நடிகை அலெக்சாண்ட்ரா தத்தாரியோ கடந்த 1986ம் ஆண்டு பிறந்தார். அவரின் நீல நிற கண்களுக்கே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் திஸ்குவின் அண்ட் த வேல் படத்தில் நடித்ததன் மூலம் ஹாலிவுட் திரையுலகிற்கு கடந்த 2005ம் ஆண்டு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து ஜானஸ் பிரதர்ஸ், பெர்சி ஜாக்சன், தி ஹவுஸ், நைட் ஹன்டர், சூப்பர்மேன் மேன் ஆப் டுமாரோ, டை இன் தி கன் பைட் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.

அலெக்ஸாண்ட்ரா

தற்போது ‘வோஜ்’ என்ற பிரபல இதழில் அலெக்சாண்ட்ராவின் அதிகாரப்பூர்வமாக திருமண புகைப்படம் வெளியாகி அவரது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. பெரும்பாலும் திரை பிரபலங்கள் தங்களின் திருமணத்தை வியாபார யுக்தியில் கொண்டு செல்லும் நிலையில், அலெக்சாண்ட்ராவும், பல மில்லியன் டாலருக்கு தனது திருமண படத்தின் மூலம் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. நட்சத்திர ஜோடியின் திருமணத்திற்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அலெக்சாண்ட்ரா &ஆண்ட்ரூ பார்ம் நட்சத்திர தம்பதியின் திருமணம் இத்தாலியில் பிரம்மாண்டமாக இருந்த நிலையில், அலெக்சாண்ட்ரா தான் அடுத்ததாக நடித்து வரும் படத்தின் படப்பிடிப்புக்காக நியூ ஆர்லியன்ஸ் நகருக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து தனது திருமணத்தை முடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web