பிரபல மலையாள நடிகர் உயிரிழப்பு!! சோகத்தில் திரையுலகம்!!

 
malayalam

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள திருவல்லா பகுதியில் நடிகர் டேனியல் பிலிப் என்ற டி.பிலிப் வசித்து வந்தார். தொழில்முறை திரையரங்குகளில் மறக்க முடியாத நடிப்பால் கவனிக்கப்பட்ட பிலிப், 1980-ம் ஆண்டு வெளியான ‘பிரளயம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

malayalam

அதனைத் தொடர்ந்து, ‘கோட்டயம் குஞ்சச்சன்’, ‘வேட்டன்’, ‘அர்த்தம்’, ‘பழசிராஜா’ உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். காளிதாசன் கலகேந்திரா மற்றும் கேபிஏசி நாடகங்களில் முன்னணி நடிகராக இருந்தார்.

rip

பின்னர் 1981-ம் ஆண்டு கே.ஜி.ஜார்ஜ் இயக்கிய கோலங்கள் படத்தை டி பிலிப் மற்றும் கேடி வர்கீஸ் தயாரித்து உள்ளனர். இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் குறிப்பிடத்தக்க பல பாத்திரங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக முதுமை காரணமாக உடல் நலமில்லாமல் இருந்தார். இதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். இவரது மகள் வெளிநாட்டில் உள்ளதால் அவர் வந்த பிறகு இறுதி சடங்கு நடைபெறும் நேரம் முடிவு செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.இவரது மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web