பிரபல நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மரணம்!

 
பேரி சின்க்லையர்

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஸ்டைலிஷான விளையாட்டு வீரர் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவருமான பேரி சின்க்லேயர் காலமானார். அவருக்கு வயது 85.

ஸ்டைலான கிரிக்கெட் வீரர் என்று வர்ணிக்கப்பட்ட பேரி சின்க்லேயர்,  நியூசிலாந்து அணிக்காக 1963 முதல் 1968-ம் ஆண்டு வரை விளையாடியுள்ளார். இந்த காலகட்டத்தில் 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர், தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக தலா ஒரு சதம் அடித்து, மொத்தம் 1,148 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் ஆயிரம் ரன்களை எடுத்த முதல் 3-வது வீரராவார். 

பேரி சின்க்லேயர்

118 முதல்தர கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ள பேரி சின்க்லேயர், 6 சதங்கள் உட்பட 32.87 சராசரியில் 6,114 ரன்கள் எடுத்தார். அவர் ஒரு சிறந்த பீல்டராகவும் கருதப்பட்டார். இதே நேரத்தில் கிளப் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். 

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைமை நிர்வாகி ஹீத் மில்ஸ் கூறுகையில், “பேரியின் மறைவு குறித்து நாங்கள் அனைவரும் மிகவும் வருத்தமடைந்தோம். பல ஆண்டுகளாக அவர் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துடன் இணைந்திருப்பதற்கு நாங்கள் பெருமைப்பட்டுள்ளோம்.


எங்கள் நிறுவனத்தில் பதிவுசெய்த முதல் கடந்தகால வீரர்களில் பேரியும் ஒருவர், மேலும் தற்போதைய வீரர்கள் விளையாட்டில் சிறந்த சூழலை அடைய உதவுவதையும் ஈடுபடுத்துவதையும் விரும்பினார். நாங்கள் அவரது இழப்பு மிகவும் கடினமானது” எனக் கூறினார்.

2016-ம் ஆண்டு ராணியின் பிறந்தநாளையொட்டி நியூசிலாந்து ஆர்டர் ஆஃப் மெரிட் என்ற குழுவில் ஒரு நபராக அங்கீகரிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web