ஆஸ்கர் விருது பெற்ற பிரபல நடிகை மரணம்!! தூங்கிக் கொண்டிருந்த போது சோகம்!!

 
ஏஞ்சலா லான்ஸ்பெரி

திரைத்துறையில் மிக உயரிய விருது ஆஸ்கர் விருது. இந்த விருதை பெற்றவர் லான்ஸ்பெரி. இவருக்கு வயது 97. இவர் அமெரிக்காவில் 1984 முதல் 1996ம் ஆண்டு வரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மர்டர், ஷி ரைட்' என்ற தொடரில் நடித்தது பெரும் வரவேற்பை பெற்றது. இவர் வயது மூப்பு காரணமாக வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது இன்று உயிரிழந்தார் .

ஏஞ்சலா லான்ஸ்பெரி

இவரது 98 வது பிறந்த நாளுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், அவரது திடீர் மறைவு குடும்பத்தினர், திரை உலகம்  மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவர் தொலைக்காட்சி தொடர்கள் மட்டுமின்றி 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்தவர். அத்துடன் 6 கோல்டன் குளோப்ஸ், 5 டோனி விருதுகள், ஆஸ்கார் விருதையும் பெற்றவர். இவருக்கு பேறையும், புகழையும் தேடித் தந்த 'மர்டர், ஷி ரைட்' தொலைகாட்சி தொடர் மொத்தம் 264 எபிசோட்டுகள் ஒளிபரப்பாகின.

ஏஞ்சலா லான்ஸ்பெரி

இந்த தொடரில் தான்  ஒவ்வொரு எபிசோட்டுக்கும் 3,00,000 டாலர் வரை ஏஞ்சலா லான்ஸ்பரி சம்பளமாக பெற்றது குறிப்பிடத்தக்கது. இவரது தாத்தா ஜார்ஜ் லான்ஸ்பரி 1930ம் ஆண்டுகளில் பிரிட்டனின் தொழிலாளர் கட்சியின் தலைவராக இருந்தவர். அவரது தாயார் மொய்னா மேக்கும் திரைத்துறையில் நடிகையாக  வலம் வந்தவர். நட்சத்திர குடும்பத்தில் பிறந்து வளர்ந்து நட்சத்திர அந்தஸ்துடனே மறைந்த லான்ஸ்பெரிக்கு பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை சமூக வலைதளங்கள் மூலம் பதிவு செய்து வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!