பிரபல நடிகை கதறல்!! இன்று எனக்கு நடந்தது நாளை உங்களுக்கும் நடக்கலாம்!!

 
தனுஸ்ரீதத்தா

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர் தமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்னர் தனுஸ்ரீ தத்தா ‘ஹார்ன் ஓகே பிளீஸ்’ படத்தின் நடித்தபோது நடிகர் நானே படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் அவரது ஆட்கள் என்னை தாக்கினார்கள் என்று மீடூவில் பரபரப்பாக குற்றம் சாட்டினார்.

தனுஸ்ரீ தத்தா

தற்போது சமூகவலைதள பக்கத்தில் தனுஸ்ரீதத்தா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் திரையுலகினர் அதிர்ச்சியடைந்தனர். கடந்த ஒரு வருடமாக எனது சினிமா வாய்ப்புகள் பறிக்கப்பட்டுவிட்டன. மேலும் எனது வீட்டு வேலைக்கார பெண் மூலம் எனது குடிநீரில் மருந்துகள் மற்றும் ஸ்டெராய்டுகள் கலக்கப்பட்டதால் கடுமையான உடல்நல பிரச்சினைகள் ஏற்பட்டுவிட்டது.

மேலும் கடந்த மே மாதம் எனது கார் 2 முறை விபத்துக்குள்ளானது. மரணத்தின் பிடியில் இருந்து தப்பித்த நான் 40 நாட்களுக்கு மும்பை திரும்பினேன். எனது இயல்பு வாழ்கைக்கு திரும்பிய என்னை மீண்டும் துன்புறுத்தத் தொடங்கி உள்ளார்கள். இதற்கு பின்னணியில் மீடுவில் நான் அளித்த குற்றவாளிகளே இருப்பார்கள் என்பதை நான் அறிவேன். எனக்கு வந்த நிலைமை நாளை உங்களுக்கும் வரலாம்.

தனுஸ்ரீதத்தா

தொடர்ந்து மகாராஷ்டிராவில் மாபியா, தேச விரோத கும்பல்கள் தாக்குதல் நடத்தி வருவதால், என்னை போன்ற பெண்கள் மற்றும் தனியாக வசிக்கும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. இதனால் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அல்லது ராணுவ ஆட்சி அமலுக்கு வர வேண்டும்’’ என்று கூறி இருக்கிறார். 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்த பிரபல நடிகை நீது சந்திரா, தொழில் அதிபர் என்னை ரூ.25 லட்சம் மாத சம்பளத்தில் மனைவியாக்கிக் கொள்ள வற்புறுத்தினார் என்று பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்நிலையில் அதே  திரைப்படத்தில் நடித்த மற்றொரு நடிகையான தனுஸ்ரீ தத்தா தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து சமூக வலைதளத்தில் குற்றம் சாட்டி இருப்பது திரையுலகிலும், அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web