பிரபல மாடல் அழகி மஞ்சுஷா தற்கொலை! கடந்த 15 தினங்களில் மூன்று அழகிகள் தற்கொலை! அதிர்ந்து போன திரையுலகம்!

 
மஞ்சுஷா

பெங்காலி மாடல் அழகி மஞ்சுஷா நியோகி கொல்கத்தாவில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார். கடந்த 2 வாரங்களில், பெங்கால் மாடலிங் உலகில் இது மூன்றாவது தற்கொலை. 

திரைத்துறையை விட  அழகானது, ஆபத்தானது, போட்டிகள் நிறைந்தது மாடலிங் துறை. நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு? என்பதைப் போல, ஒரு பக்கம் கேரளாவில், மாடலிங், திரைத்துறையைச் சேர்ந்த அழகிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்துக் கொள்கின்றனர். கடந்த 2 வாரங்களில் கேரளாவிலும் மூன்று அழகிகள் தற்கொலை செய்துள்ளனர். இந்த மூன்று  மரணங்களையும் சந்தேக மரணம் என்று போலீசார் பதிவு செய்துள்ளனர். அதே போல், பெங்காலிலும் அடுத்தடுத்து அழகிகளின் தற்கொலை, அதிர வைத்துள்ளது.

மஞ்சுஷா

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட நடிகையும், மாடலுமான பிதுஷா, மஞ்சுஷாவின் நெருங்கிய தோழி என்கிறார்கள். மாடல் அழகி மஞ்சுஷாவின் தாயார் கூறுகையில், இரண்டு நாட்களுக்கு முன்பு தனது தோழி பிதிஷா இறந்த பிறகு, என் மகள் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறினார். திருமண மேக்கப் போட்டோஷூட்களில் மிகவும் பிரபலமானவர் மஞ்சுஷா. மரணத்திற்கான சரியான காரணத்தை அறிய மஞ்சுஷா நியோகியின் உடல் தடயவியல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

மஞ்சுஷா

திரைத்துறையில் கடந்த 15 நாட்களில் இது மூன்றாவது தற்கொலை வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல தொலைக்காட்சி நடிகையான பல்லவி டேவும் கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்பு கொல்கத்தாவின் கர்ஃபா பகுதியில் உள்ள வாடகை குடியிருப்பில் இறந்து கிடந்தார். மஞ்சுஷா நியோகி தனது குடியிருப்பில் இறந்து கிடந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகை பிதுஷாவும் இப்படி அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை