பிரபல பாடகர், கொடூரமாக சுட்டுக் கொலை! பாதுகாப்பை விலக்கிய அடுத்த நாளே சோகம்!

 
பாடகர் சித்து

போலீஸ் பாதுகாப்பை விலக்கிக் கொண்ட அடுத்த நாளே பிரபல பாடகரும், பஞ்சாப் காங்கிரஸ் கட்சி தலைவருமான சித்து சுட்டுக் கொல்லப்பட்டார். பஞ்சாப் மாநில பாடகரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான சித்து மூஸ்வாலா நேற்று மாலை மான்சாவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பஞ்சாபி பாடகரான சித்து மூஸ்வாலா (28), கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அண்மையில் நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மான்சா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சித்து மூஸ்வாலா போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.


இந்த நிலையில், சித்து மூஸ்வாலா பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் நேற்று (மே 29) அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சித்து தனது இரண்டு நண்பர்களுடன் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த போது இந்தத் துப்பாக்கி தாக்குதல் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்தில் சித்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மருத்துவர்கள் அவர் உயிரிழந்தவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் சித்து மூஸ்வாலா உள்பட 424 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை பஞ்சாப் அரசு திரும்பப் பெற்றது. பாதுகாப்பு திரும்ப பெறப்பட்ட மறுநாளே சித்து மூஸ்வாலா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜீப் துப்பாக்கி சூடு

சித்து மூஸ்வாலா கொல்லப்பட்ட சம்பவம் காங்கிரஸ் கட்சியினருக்கும், நாட்டு மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக, காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் கோல்டி பிரார் என்பவர் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சரண் சிங் சப்ரா, சித்து மூஸ்வாலாவுக்கு எதன் அடிப்படையில் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது என்பதை மாநில அரசும், முதல்வரும் தெளிவுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web