எய்ம்ஸ் மருத்துவமனையில் அருமையான வேலை வாய்ப்பு!! உடனே அப்ளை பண்ணுங்க!!

 
பேராசிரியர்கள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில்  21 துறைகளில் பணியாற்ற மொத்தம் 94 பேராசிரியர்கள் தேவைப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.இதுகுறித்து மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:&மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுரியில் 21 துறைகளில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவைப்படுகின்றனர். 

வாடகை கட்டிடத்தில்  எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும்!

அதன்படி, ENT, Anatomy, Bio chemistry, General Surgery உள்ளிட்ட மொத்தம் 21 துறைகளில் பணியாற்ற 20 பேராசிரியர்கள், 17 கூடுதல் பேராசிரியர்கள், 20 இணை பேராசிரியர்கள், 37 உதவி பேராசிரியர்கள் என மொத்தம் 94 பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இடஒதுக்கீடு அடிப்படையில் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக வரவேற்கப்படுகின்றன.வருகிற 18ம் தேதிக்குள் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http://jipmer.edu.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் தகுதியுள்ள பேராசிரியர்கள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் எய்ம்ஸ் கல்லூரியில் முதல்கட்டமாக பணியமர்த்தப்படுவார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தகுதியுள்ள பேராசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

எய்ம்ஸ்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.1,264 கோடிக்கு மட்டும்தான் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மீதமுள்ள 736 கோடிக்கு ஒப்புதல் கிடைக்கப் பெற்ற தகவல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில் இதுவரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 12.35 கோடி ரூபாய் மட்டுமே நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web