விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!!! பரபரக்கும் சேலம்!!

 
போராட்டம்

சேலத்தில் இயங்கி வரும் சர்வதேச விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஒன்று கூடி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அரசு அதிகாரிகள் பலர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவது குறித்து அளவீடு செய்ய காடையாம்பட்டி, சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த தும்பிப்பாடி மற்றும் குப்பூர் பகுதி விவசாயிகளிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதற்கு விவசாயிகள் தரப்பில் உடன்பாடு ஏற்படதால் பெரும் சலசலப்பு நிலவி வந்தது.

சேலம்

இந்நிலையில், இன்று நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் தரப்பில் அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதில், நிலத்திற்கு கூடுதலாக மதிப்பீடு வழங்க வேண்டும். மேலும் ஏக்கர் ரூ.1 கோடி அளவுக்கு விற்பனை நடந்து வருகிறது. இருப்பினும் அளவீடு செய்யும் அதிகாரிகள் மதிப்பீடு குறைவாக வழங்குகின்றனர் என்றும் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால்தான் தாங்கள் போராட்டத்தில் குதித்துள்ளோம் என்று விவசாயிகள் கூறினர். இதனால் போராட்டம் நடைபெற்று வரும் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள், போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web