மீண்டும் தந்தையான நடிகர் நகுல்!! வைரலாகும் ஆல்பம்!!

 
நகுல்

தமிழ் திரையுலகில்  பாய்ஸ், காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம் உட்பட  பல படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர், நடிகர் நகுல். இவர் கடந்த 2016ல் தனது காதில்  ஸ்ருதியை கரம் பிடித்தார். இவர்கள் அவ்வப்போது வைரலான தகவல்களை பதிவிடுவதன் மூலம் சமூக வலைதளங்களில் பிசியாக இருந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்  தங்களது 6வது திருமண நாள் கொண்டாட்டங்களை ஆல்பமாக பதிவிட்டிருந்தனர். மேலும் அதில் விரைவில் 2 குழந்தையை வரவேற்க உள்ளோம் என அறிவித்தனர். 

நகுல்
தற்போது ல் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள செய்தியை பதிவிட்டுள்ளார். அதில்  நகுல் மனைவி ஸ்ருதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "அற்புதமான வாட்டர் பிரசவத்தின் மூலம் எங்கள் சிறு ஆண் குழந்தையை மீண்டும் வரவேற்கிறேன். எங்கள் தேவதை காட் டாக்டர் விஜயா கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி. இன்னும் மிக யதார்த்தமாக உணர்கிறாள், அகிரா தனது சிறிய சகோதரனைப் பார்த்து பிரமிப்பில் இருக்கிறாள்.

அவள் அவனிடம் எப்போதும் மென்மையாக இருந்தாள்! எனத் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு தங்களது வாழ்த்துகளை ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் பதிவிட்டு வருகின்றனர். நகுல் ஸ்ருதி ஜோடிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் பிரசவம் வாட்டர் பர்த் மூலம் பிறந்த நிலையில் தற்போது 2 வது குழந்தையும்  வாட்டர் பர்த் முறையில் பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web