நிலக்கரி இறக்குமதிக்கு மத்திய அரசு ஒப்புதல்!! இந்தியா முழுவதும் மின் வெட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!!!

 
மின்உற்பத்தி நிலையங்களின் போதுமான அளவுக்கு நிலக்கரி உள்ளது – நிலக்கரித்துறை அமைச்சகம் விளக்கம்

இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கடும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் பல கிராமங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை களையும் நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றன. 

நிலக்கரி ரயில்
இதன் ஒரு பகுதியாக தற்போது பிரதமர்  நிலக்கரியை இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் மிக விரைவில் மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்க நிறுவனமும், ஒன்றிய அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் 2015ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக நிலக்கரி இறக்குமதி செய்கிறது.


பிரதமராக மோடி பதவியேற்றப் பிறகு அவரது ஆட்சிகாலத்தில் முதன் முறையாக நிலக்கரி இயக்குமதி செய்யப்படுகிறது. நாடு முழுவதும் மின்வெட்டு பிரச்னை உள்ள நிலையில், நிலக்கரி நெருக்கடியை சமாளிக்க வேண்டி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டதால் பல மாநிலங்கள் இருளில் மூழ்கின. அதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதற்காகவும், நிலக்கரி இருப்பை அதிகரிக்கவும் நிலக்கரி இறக்குமதியை தீவிரப்படுத்தி இருப்பதாக அறிவித்துள்ளது.

 

இது குறித்து ஒன்றிய மின்துறை அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  ‘கோல் இந்தியா நிறுவனம் ஜி2ஜி என்ற அடிப்படையில் நிலக்கரியை இறக்குமதி செய்ய உள்ளது. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி, அரசின் அனல் மின் நிலையங்கள் மற்றும் தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கு சப்ளை செய்யப்படும்’ மேலும்,  நிலக்கரி இறக்குமதி  விஷயத்தில், சில மாநிலங்கள் தாங்களாகவே நேரடியாக வெளிநாடுகளில் இருந்து தனித்தனியாக நிலக்கரி இறக்குமதி செய்து கொள்ளும்  டெண்டர்களை வெளியிடலாம் என அறிவித்துள்ளது. 

மின்உற்பத்தி நிலையங்களின் போதுமான அளவுக்கு நிலக்கரி உள்ளது – நிலக்கரித்துறை அமைச்சகம் விளக்கம்

நடப்பு நிதியாண்டில்  செப்டம்பரில் முடிவடையும் காலாண்டில், மின் தேவை அதிகமாக இருக்கலாம் என புள்ளி விபர கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. அந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் மின்துறை அமைச்சகத்தின் நிலக்கரியை இறக்குமதி செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக ஒன்றிய மின்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web