அடி தூள்!! ஒருநாள் போட்டியில் 498 ரன்கள்!! இங்கிலாந்து அணி அசத்தல் உலக சாதனை!!

 
இங்கிலாந்து

இங்கிலாந்து அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில்  முதல் போட்டி ஆம்ஸ்டெல்வீனில் நடத்தப்பட்டது. 'இங்கிலாந்து அணியில்  பில் சால்ட், டேவிட் மலான் ஜோடி நெதர்லாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கி  சதம் அடித்தனர்.  

இங்கிலாந்து

222 ரன்கள் கூடி வந்த நிலையில் பில் சால்ட் அவுட்டானார். அடுத்து வந்த ஜாஸ் பட்லர், சிக்சர், பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார். வெறும் 47 பந்துகளிலேயே 100 ரன்களை கடந்தார். மூன்றாவது விக்கெட்  284 ரன்னில் அவுட்டானது. கேப்டன் இயான் மார்கன் வந்த வேகத்தில் வெளியேறினார். லியாம் லிவிங்ஸ்டன் 50ரன்களை அடித்து நம்பிக்கை சேர்த்தார்.

இங்கிலாந்து

இதனையடுத்து  இங்கிலாந்து அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 498 ரன் எடுத்திருந்தது.இதில்  பட்லர் 162 ரன்களுடனும்,  லிவிங்ஸ்டன் 66 ரன்களுடனும்  அவுட்டாகாமல் இருந்தனர். ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள்  குவித்த புதிய சாதனையை  படைத்தது.  2018ல் நாட்டிங்காமில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன் எடுத்தது தான்  சாதனையாக இருந்து வந்தது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web