1.40 கோடி இலங்கை மக்களுக்கு நிதியுதவி!!

 
சைலேந்திரபாபு

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா நிதியுதவி, கடனுதவி வழங்கி வருகிறது. அந்த வகையில், தமிழக அரசு சாா்பில் மத்திய அரசின் அனுமதியுடன் இலங்கைக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக கடந்த மே மாதம் 18-ம் தேதி சென்னை துறைமுகத்திலிருந்து ரூ. 32.94 கோடி மதிப்பிலான அரிசி, பால் பவுடா், மருந்துப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு அனுப்பி வைக்கப்பட்டது.

கப்பல் நிவாரண பொருட்கள் இலங்கை

அதனைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்திலிருந்து சரக்குக் கப்பலில் ரூ. 48.30 கோடி மதிப்பிலான 14,712 டன் அரிசி, ரூ. 7.50 கோடி மதிப்பிலான 250 டன் ஆவின் பால் பவுடா், ரூ. 11. 90 கோடி மதிப்பிலான உயிா்காக்கும் மருந்துப் பொருள்கள் என மொத்தம் ரூ. 67.70 கோடி மதிப்பிலான 15 ஆயிரம் டன் அத்தியாவசியப் பொருள்கள் கடந்த மாதம் 23-ம் தேதி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நிவாரண பொருட்கள்

கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கை தனது அத்தியாவசிய மற்றும் எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிக நிதியுதவி தேவை என இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், இலங்கை மக்களுக்கு தமிழக போலீஸ் சார்பில் ரூ.1.40 கோடி நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார். தமிழக போலீஸ் சார்பில் ரூ.1.34 கோடி, இந்திய காவல் பணி சங்கம் சார்பில் ரூ.6.63 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web