இன்று முதல் முன்பதிவு!! திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!!

 
திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!

 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள சேவைகளுக்கான தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாலை 4 மணி முதல் பக்தர்கள் ஆன்லைனில் டிக்கெட்டுகளை பெறலாம் என்று தெரிவித்துள்ளது.

வருகிற செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ள கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை ஆகிய சேவைகளுக்கான டிக்கெட்டுகளை, இன்று மாலை 4 மணி முதல் வருகிற 29ம் தேதி வரையில் பக்தர்கள் வழக்கம் போல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

திருப்பதி

மேலும் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை போன்றவற்றுக்கான தரிசன டிக்கெட்டுகள் பக்தர்களால் முன்பதிவு செய்யப்படுவது அதிகரித்து உள்ளது. எனவே கம்ப்யூட்டர் மூலம் குலுக்கல் நடத்தப்பட்டு அதில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்களுக்கு தரிசன வாய்ப்பு ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் குலுக்கலில் தேர்வு செய்யப்படும் பக்தர்களுக்கு அது குறித்த அறிவிப்பு அவர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான போர்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை என்ன செய்வது? திருப்பதி தேவஸ்தானம் பதில்..!!

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இணையதளம் மூலம் அதிகளவில் பக்தர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வார இறுதி நாட்களில் திருப்பதி ஏழுமலையான தரிசிக்க பொது மக்கள் கூடுவது வழக்கம். கடந்த சனிக்கிழமையன்று அதிகபட்சமாக ஒரே நாளில் சுமார் 1 லட்சம் பேர் வரையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web