இன்றுடன் முடிவடைகிறது மீன்பிடித் தடைக்காலம்!! உற்சாகத்துடன் கடலுக்குள் செல்லத் தயாராகும் மீனவர்கள்!!

 
படகு

கடலில் வசிக்கும் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக சில காலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது . இந்த நாட்களில் கடலுக்குள் விசைப்படகுகள்  மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல்  நடப்பாண்டில்ம் ஏப்ரல் 15 முதல் விசைப்படகு மூலம் கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

படகு

இந்த காலத்தில்  மீனவர்கள்  தங்கள் படகுகளை சீரமைத்தல் , வலைகளை சரி செய்தல் , ஏற்கனவே பிடித்த மீன்களை கருவாடாக மாற்றுதல் என மாற்று வேலைகளிலும் அடுத்த மீன்பிடிக்காலம் வருவதற்கு முன் ஆயத்த பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொள்வர். மேலும் இந்த 61 நாட்களும் மீனவர்கள் தங்கள் படகுகளை கரையோரங்களில்  நிறுத்தி வைத்தனர். 

கிரீஸ் படகு விபத்தில் 16 அகதிகள் பலி!
நடப்பாண்டில் மீன்பிடித்தடைக்காலம் இன்று ஜூன்14ம் தேதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைய இருக்கிறது. இன்று நள்ளிரவுக்கு பின் மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் மீன்பிடிக்கச்  செல்ல இப்போதே ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் இன்று காலை முதலே  மீன் பிடிக்க தேவையான வலை மற்ற  உபகரணங்களை படகுகளில் ஏற்றும் பணியில்  தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் . இவர்கள் கரை திரும்பும் நாள் முதல் உச்சத்தில் இருந்து வரும் மீன்களின் விலை குறையத் தொடங்கும் என அசைவப் பிரியர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web