அடி தூள்!! நாளை முதல் அரசு பேருந்துகளில் பார்சல் சேவை!!

 
அரசுப் பேருந்து

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த அரசு  போக்குவரத்து கழகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக அரசு பேருந்துகளில் பார்சல் சேவைகளை தொடங்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அரசு பேருந்துகளை தவிர்த்து  ஆம்னி பேருந்துகள், லாரிகளில் பயணியருடன் பார்சல் சர்வீசும் உண்டு.

 

இதன் மூலம் ஒரு பகுதியில் அபரிமிதமாக இருக்கும் உற்பத்தி மற்ற ஊர்களுக்கு எடுத்துச்  செல்ல ஏதுவாக அமைந்துள்ளது. அதே போல் வியாபாரம் செய்பவர்களும்  பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து லாரி மற்றும் பார்சல் சர்வீஸ்கள் மூலம் எடுத்துச் செல்கின்றனர்.

கட்டணம்

இந்நிலையில், குறைந்த அளவிலான பொருட்களை லாரி வாடகைக்கு இணையாக குறைந்த நேரத்தில் விரைவாக அனுப்பிட ஏதுவாக, பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும்  முகவர்கள் அன்றாடம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்கின்றனர். ஒரு மாதம் முழுவதும் பேருந்தில் உள்ள சுமை பெட்டியை மாத வாடகை மற்றும் தினசரி வாடகை செலுத்தி உபயோகிக்கப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  அரசு பேருந்துகளில் இத்திட்டம் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி அல்வா, ஊத்துக்குளி வெண்ணை, தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய், திண்டுக்கல் சிறு வாழை, நாகர்கோயில் நேந்திரம் சிப்ஸ் உட்பட  அனைத்து வகை பொருட்களையும்  பார்சல் சர்வீஸ்  மூலம் அனுப்பி வைக்கலாம்.

அரசு பேருந்து

இதனை, சிறு, பெரு வியாபாரிகள், வணிகர்கள், முகவர்கள் மற்றும் பொது மக்கள் இந்த சேவையினை பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கு பயனர்கள்  அருகிலுள்ள தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்ய வேண்டும். பொதுமக்கள் திருச்சி, மதுரை, சென்னை மார்க்கத்தில் தங்களது சுமைகளை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்களில் அனுப்ப முடியும். படிப்படியாக தமிழகத்தின் மற்ற ஊர்களிலிருந்து இயக்கப்படும் விரைவு பேருந்துகளிலும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web