ஜப்தி நோட்டீஸ்! கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

 
மாணவி தற்கொலை

வீட்டு கதவில், வங்கியில் இருந்து வந்தவர்கள் ஜப்தி நோட்டீஸ் ஒட்டியதால், அவமானம் தாங்காமல், தோழிகளும், அக்கம் பக்கத்தினரும் கிண்டல் செய்வார்கள் என்று மன அழுத்தத்தில் கல்லூரி மாணவி தற்கொலைச் செய்து கொண்டது கேரளாவையே உலுக்கி உள்ளது. நிமிஷ நேர தாமதம் தான். வங்கியில் பேசி விட்டு வருகிறேன் என சொன்ன தந்தை, திரும்ப வீடு வந்து சேருவதற்குள் மகள்  உயிரோடில்லை என்பது பெரும் சோகம்.

கேரளா, கொல்லம் சூரநாடு பகுதியைச் சேர்ந்தவர் அஜி குமார்.  மனைவி சாலினி,  மகள் அபிராமியுடன் சூரநாடு பகுதியில் வசித்து வந்தார். இவரது மகள் அபிராமி, செங்கனூர் இருமாலிக்கர ஸ்ரீ ஐயப்பா கல்லூரியில் பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.  இந்நிலையில் அஜிகுமார், வீடு கட்டுவதற்காக  ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கேரளா பேங்க் என்ற கேரள மாநில கூட்டுறவு வங்கியில் 10 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.

தான் வாங்கியிருந்த வீட்டுக் கடனைத் திருப்பி அடைக்க அஜிகுமார்  வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று வட்டியுடன் பணத்தை மாதம் தோறும் தவணையை வங்கியில் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட  கொரோனா பெரும் தொற்று காரணமாக  வேலை இழந்து சொந்த ஊருக்கு திரும்ப வந்திருக்கிறார். அதன் பின்னர், அவரால் சரியாக கடன் தவணையைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் அஜிகுமார், அவர் மனைவி மகள் அபிராமி ஆகியோர் நேற்று செங்கன்னூரில் ஒரு மரண வீட்டுக்கு, துக்கம் விசாரிப்பதற்காகச் சென்றுள்ளனர்.  அந்த சமயத்தில் அஜிகுமாரின் வீட்டிற்கு கடனைக் கேட்க வந்த கேரளா வங்கி அதிகாரிகள், வீட்டில் தனியாக இருந்த  அஜிகுமாரின் தந்தை சசிதரன், தாய் சாந்தம்மா ஆகியோரிடம் பேசி உங்களது மகன் லோன் செலுத்த தவறியதால் வீட்டை  ஜப்தி செய்வதாக கூறி வீட்டில்  நீதிமன்றத்தின் ஜப்தி நோட்டீஸ் கூறி ஒட்டி விட்டு சென்றுள்ளனர். அப்போது  வயதான அவரது பெற்றோர்கள், நோட்டீஸ் ஒட்டாதீர்கள்.. மகன் வந்ததும் அவனிடம் பேசிவிட்டு நடவடிக்கை எடுங்கள் என கூறி தடுத்தும் அவர்கள், வீட்டுக் கதவிலும், வீட்டின் வெளியே  உள்ள மரத்தில், இந்த வீடு ஜப்தி செய்யப்பட உள்ளது என நோட்டீஸ் ஒட்டி விட்டு சென்றுள்ளனர்

பின்னர் வீடு திரும்பிய அவர்கள் வீட்டின் முன் வைக்கப்பட்ட ஜப்தி நோட்டீஸ் போர்டை கண்டதும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அப்போது  அபிராமி, 'இது நமக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டாதாக கூறி தந்தையிடம் அழுதுள்ளார். 

வீட்டின் வாசலில் உள்ள மரத்திலும் பலகையில் எழுதி உள்ளார்கள். எல்லோரும் பார்ப்பார்கள் என மன அழுத்தத்தில், உடனே அந்த போர்ட்டை கழற்றி விடுங்கள். இல்லையேல் ஏதேனு துணி வைத்து  மறைத்து விடுங்கள் என கூறியிருக்கிறார்.

தான் வங்கி அதிகாரிகளிடம் போய் பேசி விட்டு வருகிறேன். அவர்களாகவே அதை கழற்றி விடுவார்கள் என்று கூறி, அபிராமியின் தந்தை  வங்கிக்கு சென்று அதிகாரிகளிடம் கால அவகாசம் கேட்டுள்ளார். இந்நிலையில் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த மாணவி அபிராமி வீட்டில் உள்ள அறையில், தந்தை திரும்பி வருவதற்குள் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வங்கிக்குச் சென்று திரும்பிய அஜிகுமார் அறையில் மகள் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு கதறி அழுதார். பத்தாம் வகுப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் 'ஏ ப்ளஸ் ' மதிப்பெண் எடுத்த அபிராமி நன்கு படிக்கக் கூடிய மாணவி என்கிறார்கள். வீட்டு முன் ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web