அயோத்தி ராமர் கோயில் கருவறைக்கு அடிக்கல்!! யோகி ஆதித்யநாத் நெகிழ்ச்சி!!

 
யோகி ஆதியானந்த்

உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ள அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட இருந்த சட்ட ரீதியிலான சிக்கல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தான் சரியானது. அங்கு ராமர் கோவிலைக் கட்ட ராமர் கோவில் டிரஸ்ட்டும் அமைக்கப்பட்டு, கட்டுமான பணிகள் விரைவாகத் தொடங்கப்பட்டன.

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 110 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த கோவிலைக் கட்ட ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இருப்பினும், இதுவரை நன்கொடைகள் மூலம் மட்டுமே கட்டுமானப் பணிகளுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளதாகக் கோவில் டிரஸ்ட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

360 அடி நீளம், 235 அடி அகலத்தில் அமையுள்ள இந்த கோவில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களால் கட்டப்படுகிறது. இந்த கோவில் பக்தர்களுக்கான தனி மையம், அருங்காட்சியகம், ஆராய்ச்சி மையம், ஆடிட்டோரியம், கால்நடை மையம் ஆகியவை அமைந்திருக்கும்.இந்த நிலையில், 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பக்கதர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று ராமர் கோவில் டிரஸ்ட் அறிவித்திருந்து.

அயோத்தி ராமர் கோவில்

இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கருவறைக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று அடிக்கல் நாட்டினார். ராமர் கோயில் கருவறைக்கான முதல் கல்லை எடுத்துவைத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார்.துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவும் பங்கேற்ற இந்த ஆன்மீக விழாவில், அயோத்தியை சேர்ந்த 90 சாதுக்களும் பங்கேற்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web