நாளை பள்ளிகளில் விலையில்லா புத்தகங்கள், சீருடை!! உற்சாகத்தில் மாணவர்கள்!!

 
இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

தமிழகத்தில்  கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்தன. பிப்ரவரி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளன. இந்த விடுமுறை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. நாளை ஜூன் 13ம் தேதி  1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு  திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. நாளையே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்  மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள், நோட்டுகள் ஆகியவை வழங்கப்படும்.  பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே விநியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. 

பள்ளிகள்
மேலும் அடுத்த கல்வியாண்டு துவங்கப்படும் நாளில்  திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். அத்துடன் எண்ணும் எழுத்தும் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். 11ம் வகுப்புகளுக்கு ஜூன் 27 ம் தேதியும்,12ம் வகுப்புகளுக்கு ஜூன் 20ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் தொடங்கும் நேரம்,முடிவடையும் நேரம் இவைகளை பள்ளி நிர்வாகமே முடிவெடுத்துக் கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.பள்ளி அமைவிடம்,போக்குவரத்து வசதி போன்றவற்றை  கருத்தில்கொண்டு பள்ளி மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து முடிவெடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 8 பாடவேளைகள் கொண்டதாக பள்ளிகள் செயல்பட வேண்டும் எனவும்  பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

பள்ளிகள்
2022-23ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ்  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  2023 மார்ச் 13ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வுகளும், 2023 மார்ச் 14ம் தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வுகளும், 2023 ஏப்ரல் 3ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார். நாளைய தினம் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே  காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படவில்லை . பள்ளிகளில் 8.30 மணிக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் திட்டத்தை எப்போது தொடங்கலாம் என முதல்வரிடம் கலந்தாலோசித்து பின்னர் அறிவிக்கப்படும் என  அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இது தவிர  நீட் தேர்வுக்கு தனியே பயிற்சிகள் வழங்கப்பட மாட்டாது. ஆனால்  பள்ளிகளிலேயே மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web