இன்று 1 முதல் 5 வரை இலவச பாடப்புத்தகம்!!

 
இலவச பாடப்புத்தகம்

புதுவையில் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதி தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வுகள் முடியும் முன்பே 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோடை விடுமுறை விடப்பட்டது. 12 மற்றும்  10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இந்த நிலையில், புதுவை, காரைக்காலில் கோடை விடுமுறைக்கு பின்னர் 1 முதல் 10-ம் வகுப்பு வரை மற்றும் 12 வகுப்புக்கு இன்று  பள்ளிகள் திறக்கப்படுகிறது.

பள்ளிகள்

இதற்கான ஏற்பாடுகளில் கல்வித்துறை இறங்கியுள்ளது.இந்நிலையில் வகுப்பறைகள் சுத்தப்படுத்தப்பட்டு, மாணவர்களின் வருகையை எதிர்நோக்கியுள்ளன. கட்டிடங்களில் பழுதுகளும் சீரமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் வகுப்பறைகளில் எலக்ட்ரானிக்ஸ் சாதனைங்கள் முறையாக செயல்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டன. பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி பள்ளிகளுக்கு நேரடியாக சென்று பணிகளை ஆய்வு செய்தார்.

ஜிப்மர் மருத்துவமனை புதுச்சேரி  புதுவை

 நாளையே பாடபுத்தகம், சீருடை வழங்கவும், சிறப்பு பஸ்களை இயக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பள்ளிகளில் கொரோனா விதிகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். பிளஸ்-1 வகுப்புகள் ஜூலை 11-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web