ஜூன் 21 முதல் இலவச டோக்கன்!! மக்களே மிஸ் பண்ணீடாதீங்க!!!

 
மூத்த குடிமக்கள்

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக தேவைகளின் அடிப்படையில் மட்டுமே பொதுப்போக்குவரத்து இயக்கப்பட்டு வந்தன. தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் கொரோனாவிற்கு முந்தைய அட்டவணைப்படி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை மகளிர், மூத்த குடிமக்கள், 5 வயது வரை உள்ள சிறார்கள் அனைவருக்கும் பேருந்துகளில் பயணிக்க கட்டணம் கிடையாது. 

மூத்த குடிமக்கள்
அந்த வகையில்  மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் ஜூன் 21 முதல் வழங்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இந்த டோக்கன்களில் 40 பணிமனை , பேருந்து நிலையங்களில் ஜூலை 31 வரை இலவச டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மூத்த குடிமக்கள்
மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டத்தின் கீழ் இந்த டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. மேலும்  60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், டோக்கன் பெறுவதற்காக போக்குவரத்துக்கழகத்தின் https://mtcbus.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ  இணையதளத்திலும் இதற்குரிய  விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web