சுதந்திர போராட்ட தியாகி ராஜதுரை மைக்கேல் காலமானார்! இன்று மாலை இறுதி சடங்குகள்!

 
ராஜதுரை மைக்கேல்

நேதாஜி படைகள் இணைந்து, 3 முறை சிறை சென்ற சுதந்திர போராட்ட தியாகி ராஜதுரை மைக்கேல் நேற்று காலமானார். திருச்சியில் வசித்து வந்த சுதந்திரப் போராட்ட தியாகி பி.ராஜதுரை மைக்கேல் வயது முதிர்வு காரணமாக காலமானார். இறுதிச்சடங்குகள் இன்று மாலை நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பிறந்த தியாகி ராஜதுரை திருநெல்வேலி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவருக்கு வயது 101. ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்திக் கொண்டிருந்த காலத்தில் 1944ம் ஆண்டு பர்மாவில் இருந்து இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கி ஆங்கிலேயர்களை இவர் எதிர்த்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

அந்த காலகட்டத்தில் இந்திய தேசிய ராணுவப்படையில் இணைந்து தியாகி ராஜதுரை மைக்கேல் 3 முறை சிறை சென்றுள்ளார். அப்போது ஆங்கிலேயர்களுடன் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பி இருக்கிறார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான தாமிரப்பட்டயத்தை இவர் பெற்றுள்ளார். மேலும் மொராஜி தேசாய், சஞ்சீவ்ரெட்டி, கக்கன், விஷ்ணுராம் மேதி, அறிஞர் அண்ணா ஆகிய தலைவர்களுடன்  நெருங்கிய தொடர்பில் இருந்த பெருமை இவரை சேரும்.

இவருக்கு 2 மகன்கள், 4 மகள்கள், பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன், பேத்திகள் என உண்டு. தற்போது திருச்சியில் உள்ள தனது மகளின் வீட்டில் வசித்து வந்த தியாகி ராஜதுரை மைக்கேல் வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று (11ம் தேதி) மாலை காலமானார்.

திருச்சி

அவரின் இறுதிச்சடங்குகள் இன்று பிற்பகல் திருச்சி பொன்னகர் 5வது குறுக்குத் தெருவில் உள்ள இல்லத்தில் நடத்தப்பட்டு ஓயாமரி மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

சுதந்திரப் போராட்ட தியாகியான ராஜதுரை மைக்கேலை இழந்து அவரது குடும்பத்தினரும், ஊர் மக்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் சுதந்திரப் போராட்ட வீரர் எங்கள் ஊரில் வசித்து வந்தார் என்று பெருமிதத்துடன் சொல்லி வருகிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web