சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!! பயணிகள் ரயில்கள் தாமதம்!!

 
ரயில் விபத்து

மதுரையில் அமைந்துள்ள   ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரயில் ஒன்று டிராக்டர்களை ஏற்றிச் சென்றது. இந்த சரக்கு ரயில் மதுரை அருகே வாடிபட்டியில் உள்ள டிராக்டர் தொழிற்சாலையில் இருந்து டிராக்டர்களை வடமாநிலங்களுக்கு ஏற்றிச் செல்வதற்காக இன்று அதிகாலை சரக்கு ரயில் வந்தது.

ரயில் விபத்து

மதுரை ரயில் நிலையத்தின் 3வது நடைமேடைக்கு வந்து கொண்டு இருந்த ரயிலின்  மைய பகுதியில் உள்ள 2 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின. இதனையடுத்து சரக்கு ரயில் அவசரமாக நடைமேடையை உரசி நிறுத்தப்பட்டது. ரயில்வே ஊழியர்கள், ரயில் பெட்டிகளை மீட்கும் பணியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஈடுபட்டனர். ரயில் விபத்து குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயில் தண்டவாளம் போலீசார் தற்கொலை

அதிகாலையில் விபத்து நடந்ததால் எந்த உயிர்ச்சேதமும் இல்லை. அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் விபத்தால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் சில தாமதமாக புறப்பட்டுச் சென்றன.  விபத்துக்குள்ளான பெட்டியை தவிர மற்ற பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இதன் பிறகு வழக்கம் போல் மற்ற ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web